"7 நாட்களில் டெங்கு காய்ச்சலுக்கு நிவாரணம்"- கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

7 நாட்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமென கூறி கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சன் லைப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் ராபர்ட் சாக்கோ என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் இயற்கை மருத்துவ முறையில் நானோ தொழில் நுட்பத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் 3 முதல் 7 நாட்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமெனவும், 30 நாட்களில் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் செயழிலப்பு, இருதய அடைப்புகள் சரி செய்யப்படுமெனவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகர் சோதனை மேற்கொண்டதில் ராபர்ட் சாக்கோ பிஏ பொருளாதாரம் படித்து விட்டு, மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராபர்ட் சாக்கோவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மண்டல சுகாதார பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகர் கூறுகையில், "டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக பணம் வசூலித்து வருகின்றனர். இதுபோன்ற மருத்துவர்களிடம் சென்று ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் டெங்கு நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், நடப்பாண்டில் இதுவரை 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...